'வடக்கே காசி என்றால் தெற்கே தென்காசி' : திராவிட மாடல் அரசால் தமிழ்நாடு உயர்ந்துள்ளது - மு.க.ஸ்டாலின்
- எங்கும் இயற்கை எழில் கொஞ்சும் தென்காசி மண்.
- தமிழ்நாடு முழுவதும் இதுவரை 9 லட்சம் பேருக்கு புதிதாக முதியோர் ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது.
தென்காசியில் ரூ.1,020 கோடியில் முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து புதிய பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து அவர் கூறியதாவது:
* எங்கும் இயற்கை எழில் கொஞ்சும் தென்காசி மண்.
* வடக்கே ஒரு காசி என்றால் தெற்கே ஒரு தென்காசி என சொல்லும் அளவிற்கு பெருமை வாய்ந்த நகரம் தென்காசி.
* தூறலும் சாரலும் கொண்டு மக்களை குளிர்விக்கும் மண் தென்காசி.
* காலுக்கு கீழே நிலமும், தலைக்கு மேலே கூரையும் வேண்டும் என்பது ஒவ்வொருவரின் கனவு.
* கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் கட்டப்பட்ட ஒரு லட்சமாவது வீட்டை பயனாளிக்கு ஒப்படைத்தது பெருமை.
* வருவாய் துறை சார்பில் 17 விதமான சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.
* 10 லட்சம் பேருக்கு இதுவரை இலவசமாக வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.
* அன்பு மகள் பிரேமாவிற்கு கொடுத்த வாக்குறுதிப்படி நடைபெறும் வீடு கட்டும் பணியை நேரில் பார்வையிட்டேன். வீடு கட்டும் பணி வேகமாக நடைபெறுகிறது.
* தமிழ்நாடு முழுவதும் இதுவரை 9 லட்சம் பேருக்கு புதிதாக முதியோர் ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது.
* 15 ஊர்களில் ஊராட்சி மன்ற கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.
* எல்லோருக்கும் எல்லாம் என்பதை நோக்கமாக கொண்டு அனைத்து மாவட்டங்களையும் வளர்த்து வருகிறோம்.
* தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாட்டின் அனைத்து துறைகளையும் முன்னேற்றி வருகிறோம்.
* திராவிட மாடல் அரசு அமைந்த பின்னர் தமிழ்நாடு உயர்ந்துள்ளது.
* மாவட்டந்தோறும் அரசு விழாக்களில் பங்கேற்று அந்த மாவட்டங்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.