தமிழ்நாடு செய்திகள்

'வேற்றுமையில் ஒற்றுமைதான் இந்தியாவின் தேசிய மொழி' - கனிமொழியை பாராட்டிய முதலமைச்சர்

Published On 2025-06-04 11:43 IST   |   Update On 2025-06-04 11:43:00 IST
  • மக்களின் உணர்வுகளைக் கைத்தட்டல்களாகவும் - உங்களால் அதிகம் பகிரப்படும் காணொளியாகவும் மாற்றிய தங்கை கனிமொழியை வாழ்த்தினேன்!
  • இந்தியாவுக்கான குரலாக தமிழ்நாட்டின் அன்புமொழியை பேசியுள்ளார் தங்கை கனிமொழி.

சென்னை:

பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா நடத்திய 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து உலக நாடுகளுக்கு விளக்க கனிமொழி தலைமையிலான எம்.பி.க்கள் குழு வெளிநாட்டில் பயணம் மேற்கொண்டு உரையாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், தங்கை கனிமொழியைக் கண்டு பெருமை கொள்கிறேன்! என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியுள்ளதாவது:-

ஸ்பெயின் மண்ணில், "இந்தியாவின் தேசிய மொழி வேற்றுமையில் ஒற்றுமை" என உரக்கச்சொல்லி, மக்களின் உணர்வுகளைக் கைத்தட்டல்களாகவும் - உங்களால் அதிகம் பகிரப்படும் காணொளியாகவும் மாற்றிய தங்கை கனிமொழியை வாழ்த்தினேன்!

இந்திய நாட்டுக்கான குரலாகத் தமிழ்நாட்டின் அன்புமொழியை - ஒற்றுமைமொழியைப் பேசிய தங்கை கனிமொழியைக் கண்டு பெருமை கொள்கிறேன்! என தெரிவித்துள்ளார். 



Tags:    

Similar News