மகளிர் உரிமைத்தொகை: விடுபட்டவர்கள் ஜூன் முதல் விண்ணப்பிக்கலாம் - முதலமைச்சர் அறிவிப்பு
- 1.14 கோடி பேருக்கு கலைஞர் உரிமைத்தொகை திட்டம் மூலம் மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது.
- 9000 இடங்களில் நடைபெறும் முகாம்களில் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
கலைஞர் உரிமைத்தொகைக்கு இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பித்தால் தகுதியான மகளிர் அனைவருக்கும் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் கூறியதாவது:
* மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை கோரி விண்ணப்பித்தவர்களில் தகுதியான அனைவருக்கும் விரைவில் வழங்கப்படும்.
* 1.14 கோடி பேருக்கு கலைஞர் உரிமைத்தொகை திட்டம் மூலம் மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது.
* மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்டவர்கள் விண்ணப்பித்தால் அவர்களுக்கும் உரிமைத்தொகை வழங்கப்படும்.
* கலைஞர் உரிமைத்தொகை பெற ஜூன் மாதம் முதல் விண்ணப்பிக்கலாம்.
* மக்களுடன் முதல்வர் திட்டத்தின் அடிப்படையில் ஜூனில் 4-ம் கட்டமாக 9000 இடங்களில் முகாம் நடத்தப்படும்.
* 9000 இடங்களில் நடைபெறும் முகாம்களில் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
* தகுதியான மகளிர் அனைவருக்கும் உரிமைத்தொகை வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.