தமிழ்நாடு செய்திகள்

Result எதுவானாலும் அதுவே முடிவல்ல - மாணவர்களுக்கு முதலமைச்சர் அறிவுரை

Published On 2025-05-08 08:50 IST   |   Update On 2025-05-08 08:50:00 IST
  • தேர்ச்சி பெறாதவர்கள், எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காதவர்களுக்கு இன்னும் பல வாய்ப்புகளைக் காலம் வழங்கத்தான் போகிறது.
  • இது உங்கள் வாழ்வின் தொடக்கம் மட்டுமே.

பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியாகிறது. பொதுத்தேர்வு முடிவை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் காலை 9 மணிக்கு வெளியிட இருக்கிறார்.

இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்னும் சற்று நேரத்தில் வெளியாகின்றன. Result எதுவானாலும் அதுவே முடிவல்ல என்பதை மாணவர்களும், பெற்றோர்களும் உணர வேண்டும்.

தேர்ச்சி பெறாதவர்கள், எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காதவர்களுக்கு இன்னும் பல வாய்ப்புகளைக் காலம் வழங்கத்தான் போகிறது. இது உங்கள் வாழ்வின் தொடக்கம் மட்டுமே. இனிதான் உங்களின் சிறப்பான phase அமையவுள்ளது என்ற positive outlook-உடன் இந்தத் தேர்வு முடிவுகளை அணுகுங்கள்.

பெற்றோர்களும் பிள்ளைகள் மீது எந்த அழுத்தத்தையும் ஏற்படுத்தாமல், அவர்களது அடுத்தகட்ட வளர்ச்சிக்கு ஒரு நல்ல நண்பனாகத் துணைநில்லுங்கள்!

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News