பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜமை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் முதலமைச்சர்
- முதலமைச்சரை நேரில் சந்திக்க வேண்டும் என்ற பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம் கோரிக்கை விடுத்திருந்தார்.
- எம்.என். ராஜம் அவர்களின் இல்லத்திற்கு முதலமைச்சர் நேரில் சென்றார்.
பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜமை நேரில் சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்
நேரில் சந்திக்க வேண்டும் என்ற பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம்-ன் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக அவரை நேரில் சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
இது தொடர்பான புகைப்படத்தை முதலமைச்சர் அலுவலகம் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அந்த பதிவில், "பழம்பெரும் நடிகை திருமதி எம்.என். ராஜம் அவர்கள் தனது 90-வது பிறந்தநாளையொட்டி நாளிதழுக்கு அளித்த பேட்டியில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை சந்திக்க விரும்புவதாக தெரிவித்திருந்தார். அவரது விருப்பத்தை நிறைவேற்றிடும் வகையில் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை, அடையாறிலுள்ள பழம்பெரும் நடிகை திருமதி எம்.என். ராஜம் அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று, பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து பேசினார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.