மாதம் 1 கோடி பயணிகளை நோக்கி சென்னை மெட்ரோ - நிர்வாகம் பெருமிதம்
- நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் 86,99,344 பயணிகளும், பிப்ரவரி மாதத்தில் 86,65,803 பயணிகளும் பயணம் செய்துள்ளனர்.
- அதிகபட்சமாக 05.05.2025 அன்று 3,23,899 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரெயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை வழங்கி வருகிறது.
அந்த வகையில் 2025-ம் ஆண்டு மே மாதத்தில் 89,09,724 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணித்துள்ளனர்.
நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் 86,99,344 பயணிகளும், பிப்ரவரி மாதத்தில் 86,65,803 பயணிகளும், மார்ச் மாதத்தில் 92,10,069 பயணிகளும், ஏப்ரல் மாதத்தில் 87,89,587 பயணிகளும் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக 05.05.2025 அன்று 3,23,899 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.
2025, மே மாதத்தில் மட்டும் பயண அட்டைகளை பயன்படுத்தி 5,86,430 பயணிகள், டோக்கன்களை பயன்படுத்தி 1,268 பயணிகள், குழு பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி 169 பயணிகள், கியூஆர் கோடு பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 42,33,865 பயணிகள், சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 40,87,992 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.
இந்த நிலையில் சென்னை மெட்ரோ ரெயில் சேவை தொடங்கியதில் இருந்து கடந்த ஏப்ரல் வரை 39 கோடி பயணிகள் பயணம் செய்ததாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் பெருமிதமாக தெரிவித்துள்ளது. மாதம் 1 கோடி பயணிகளை நோக்கி மெட்ரோ பயணிப்பதாக தெரிவித்துள்ளது.
மேலும், எங்களை தேர்ந்தெடுத்ததற்காக எங்கள் அனைத்து பயணிகளுக்கும் நன்றி. சென்னை மெட்ரோ ரெயில் உங்கள் நம்பகமான பயண கூட்டாளியாக இருப்பதில் பெருமை கொள்கிறது என்று தெரிவித்துள்ளது.