தமிழ்நாடு செய்திகள்
துணை முதலமைச்சர் உதயநிதியிடம் வாழ்த்து பெற்ற சந்திரகுமார் எம்எல்ஏ
- துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
- இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றுள்ள அண்ணன் சந்திரகுமார் அவர்களை இன்று நேரில் வாழ்த்தினோம்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற சந்திரகுமார், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தந்தை பெரியார் சிலையை வழங்கி வாழ்த்து பெற்றார்.
இதுகுறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றுள்ள அண்ணன் சந்திரகுமார் அவர்களை இன்று நேரில் வாழ்த்தினோம்.
பெரியார் மண்ணில் கழகம் பெற்ற பெருவெற்றியை குறிக்கும் வகையில் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் திருவுருவச்சிலையை அண்ணன் சந்திரகுமார் அவர்கள் நமக்கு பரிசளித்தார்கள். அவரது பணிகள் சிறக்கட்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.