தமிழ்நாடு செய்திகள்

சாதிவாரி கணக்கெடுப்பு என்பது திமுக-வின் வெற்றி எனக் கூறுவது அரசியல் ஆதாயம் தேடும் முயற்சி: நிர்மலா சீதாராமன்

Published On 2025-05-02 17:42 IST   |   Update On 2025-05-02 17:42:00 IST
  • தமிழகத்தில் சமத்துவம் எங்கே இருக்கிறது?- சாதிகளுடன் பெயர் பலகை உள்ளது.
  • சாதிவாரி கணக்கெடுப்பு என்பதை அரசியல் ரீதியாக அணுகக் கூடாது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

* ஜி.எஸ்.டி கவுன்சில் என்பது மோடி போடும் வரி இல்லை. எல்லா மாநில நிதியமைச்சர்களும் அடங்கியதுதான் கவுன்சில். நடுத்தர மக்கள் பயன்படுத்தப்படும் பொருட்கள் மீது ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது என்ற வாதம் தவறானது. ஜிஎஸ்டி அமல்படுத்துவதற்கு முன்னதாகவே வரி இருந்தது. முன்னதாக இருந்ததை விட ஜிஎஸ்டி வந்த பின் வரி விகிதம் குறைந்துள்ளது.

* தமிழகத்தில் சமத்துவம் எங்கே இருக்கிறது?- சாதிகளுடன் பெயர் பலகை உள்ளது. இன்றும் தமிழ்நாட்டு வீதிகளில் சாதி பெயர் அடங்கிய தெருக்களின் பெயர் பலகைகள் காணப்படுகிறது.

* சமத்துவம் பேசும் திமுக, சாதிவாரி கணக்கெடுப்பில் வெற்றி என கூறுவதா?. சாதிவாரி கணக்கெடுப்பு என்பது திமுக-வின் வெற்றி எனக் கூறுவது அரசியல் ஆதாயம் தேடும் முயற்சி. சாதிவாரி கணக்கெடுப்பு என்பதை அரசியல் ரீதியாக அணுகக் கூடாது.

* நிதி ஒதுக்கும்போது மறைமுகமாக எனக்கு நன்றி தெரிவித்துவிட்டு, வெளியில் வந்து எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

* நீதிமன்றம் கண்டித்த பின்னர் அமைச்சர்களை நீக்கும் நிலை யாருக்கு வந்தது? திமுக கூட்டணிக்கா? இல்லை பாஜக கூட்டணிக்காக?

* குடிநீரில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட கொடுமை தமிழ்நாட்டை தவிர வேறு எந்த மாநிலத்திலும் நடக்காத ஒன்று

* தங்களை விட வளர்ச்சியடையாதவை எனக் கூறும் வட மாநிலங்களில் கூட இத்தகைய அவலம் நிகழவில்லை.

Tags:    

Similar News