தமிழ்நாடு செய்திகள்

துணை ஜனாதிபதி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

Published On 2025-10-17 08:48 IST   |   Update On 2025-10-17 08:48:00 IST
  • மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • ஆர்.ஏ.புரத்தில் உள்ள முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வீட்டிற்கும் 4-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

சென்னை:

தமிழகத்தில் சமீப காலமாக அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரது வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்களால் நடத்தப்படும் சோதனையில் அது புரளி என்பது தெரியவருகிறது. இதனை தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை போயஸ் கார்டன் பின்னி சாலையில் உள்ள துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

வெடிகுண்டு மிரட்டலை அடுத்து வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், காவல்துறையினர் சி.பி.ராதாகிருஷ்ணன் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. சோதனை செய்ததில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்த நிலையில், மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேபோல் ஆர்.ஏ.புரத்தில் உள்ள முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வீட்டிற்கும் 4-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

Tags:    

Similar News