தமிழ்நாடு செய்திகள்
ராயப்பேட்டையில் நள்ளிரவில் பைக் ரேஸின்போது நடந்த பயங்கர விபத்து - இருவர் உயிரிழப்பு
- விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ரேஸை தடுக்க காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
சென்னை:
ராயப்பேட்டை பீட்டர்ஸ் பாலத்தில் நள்ளிரவில் பைக் ரேஸின்போது ஏற்பட்ட விபத்தில், ரேஸில் ஈடுபட்ட சுஹைல், எதிரே ஹெல்மெட் அணிந்து வந்த குமரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் பைக் ரேஸில் ஈடுபட்ட வாலிபர் சுஹைலின் நண்பர் சோயல் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரேஸை தடுக்க காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இருப்பினும், நள்ளிரவில் ரேஸில் ஈடுபடும் சம்பவங்கள் அரங்கேறி வருவது குறிப்பிடத்தக்கது.