தமிழ்நாடு செய்திகள்
தென் மாவட்டங்களுக்குச் செல்வோர் கவனத்திற்கு... மாற்று வழிகளை பயன்படுத்த போலீசார் அறிவுறுத்தல்
- தொடர் விடுமுறையை ஒட்டி பலரும் சொந்த ஊருக்கு படையெடுத்து வருகின்றனர்.
- தென் மாவட்டங்கள் செல்வோர் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை தான் பயன்படுத்தி வருகின்றனர்.
நாளை (வெள்ளிக்கிழமை) சுதநதிர தினம் என்பதால் தொடர் விடுமுறையை ஒட்டி பலரும் சொந்த ஊருக்கு படையெடுத்து வருகின்றனர்.
தொடர் விடுமுறைக்கு சென்னையில் இருந்து தென் மாவட்டங்கள் செல்வோர் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை தான் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், செங்கல்பட்டு மாவட்டம் புக்கத்துறை, படாளம் பகுதியில் மேம்பாலக் கட்டுமானம் மற்றும் சாலை விரிவாக்கம் நடப்பதால் வாகன நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதுள்ளது.
ஆதலால் தொடர் விடுமுறையால் ஊருக்கு செல்வோர் கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட மாற்று வழிகளையும் பயன்படுத்த போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.