தமிழ்நாடு செய்திகள்
பிரதமருக்கு கருப்பு கொடி காட்ட முயற்சி- அவினாசியில் ஆதித்தமிழர் பேரவையினர் கைது
- பிரதமர் நரேந்திர மோடி இன்று கோவைக்கு வருகை தர உள்ளார்.
- அவிநாசி போலீசார் அவர்களை கைது செய்து ரோட்டரி கிளப் மண்டபத்தில் சிறை வைத்தனர்.
அவினாசி:
தென்னிந்திய இயற்கை வேளாண்மை விவசாயிகள் மாநாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று கோவைக்கு வருகை தர உள்ளார்.
இந்தநிலையில் பீகார் தேர்தலின்போது, பீகார் மக்கள் தமிழகத்தில் துன்புறுத்தப்படுவதாக பொய் பிரசாரம் செய்ததாகவும், அதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் திருப்பூர் மாவட்ட ஆதித்தமிழர் பேரவை சார்பில் கருப்புக்கொடி காட்ட இணை பொதுச்செயலாளர் விடுதலைச் செல்வம் தலைமையில் சிலர் தயாராகி வந்தனர்.
இதையறிந்த அவிநாசி போலீசார் அவர்களை கைது செய்து ரோட்டரி கிளப் மண்டபத்தில் சிறை வைத்தனர்.