தமிழ்நாடு செய்திகள்

அடுத்தாண்டு ஜனவரிக்கு பிறகு தேர்தல் கூட்டணி குறித்து கேளுங்கள்- ஆர்.பி. உதயகுமார்

Published On 2025-11-06 15:14 IST   |   Update On 2025-11-06 15:14:00 IST
  • மக்களை பாதுகாக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் இருக்கிறது.
  • பேச வேண்டியவர்கள் பேசினால்தான் அனைத்தும் நடக்கும்.

மதுரையில் த.வெ.க. கூட்டணி குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பதில் அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாடு சட்டமன்றத்தில் அதிமுக பிரதான எதிர்க்கட்சி. சட்டப்பூர்வமான பிரதான எதிர்க்கட்சி.

முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி இருந்தார். 43 தொகுதிகளில் 1,92,000 வாக்குகள் தான் பின்னடைவு. இப்படி தான் ஆட்சி மாற்றம் நிகழ்ந்ததே தவிர,

ஐந்தரை கோடி வாக்காளர்களில் ஒரு லட்சத்து 92 ஆயிரம் வாக்காளர்கள் அதிமுக கூட்டணிக்கு கிடைத்திருந்தால், எந்த உள்குத்தும், வெளிகுத்தும், ஊமைகுத்தும் இல்லாமல் இருந்திருந்தால், நாங்கள் எல்லோரும் ஜெயிச்சிருப்போம்.

உள்குத்து, ஊமைக்குத்து என்றால் என்ன என்று கேட்காதீர்கள். அது வாங்கியவர்களுக்கு மட்டும்தான் தெரியும்.

இது ஒரு பருவமழை காலம். மக்களை பாதுகாக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் இருக்கிறது. பிப்ரவரி, மார்ச் மாதத்திற்கு பிறகு கூட்டம் குறித்து கேள்வி கேளுங்கள். அப்போது சொல்கிறோம்.

நான் சொல்லியோ.. நீங்கள் சொல்லியோ ஒன்றும் நடக்காது. பேச வேண்டியவர்கள் பேசினால்தான் அனைத்தும் நடக்கும். நல்லதே நடக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News