தமிழ்நாடு செய்திகள்

ஆரம்பாக்கம் பாலியல் வன்கொடுமை - கைதான வாலிபரை சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை

Published On 2025-07-30 09:55 IST   |   Update On 2025-07-30 09:55:00 IST
  • குற்றவாளியிடம் 18 மணி நேரத்திற்கு மேலாக கவரைப்பேட்டை போலீஸ் நிலையத்தில் வைத்து முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டது.
  • கைதான வாலிபர் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஒரு கிராமத்தைச்சேர்ந்த 8 வயது பள்ளி சிறுமி, கடநத 12-ஆம் தேதி வடமாநில வாலிபர் ஒருவரால் பாலியியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக ஆரம்பாக்கம் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து 20-க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைத்து குற்றவாளியை தேடி வந்தனர். அந்த வடமாநில வாலிபர் குறித்து கண்காணிப்பு கேமரா பதிவு காட்சி மற்றும் புகைப்படங்களையும் போலீசார் வெளியிட்டு தேடிவந்தனர். அந்த நபர் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ. 5 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய அசாம் மாநிலத்தை சேர்ந்த கமல் பகதூர் பிஸ்வாகர்மா என்கிற ராஜீ பிஸ்வாகர்மா (வயது35) என்ற வாலிபரை கடந்த 25-ந்தேதி ஆந்திர மாநிலம் சூலூர்பேட்டையில் தனிப்படை போலீசார் கைது செய்தனர். சம்பவம் நடைபெற்று 14 நாட்களுக்கு பிறகு பிடிபட்ட குற்றவாளியிடம் 18 மணி நேரத்திற்கு மேலாக கவரைப்பேட்டை போலீஸ் நிலையத்தில் வைத்து முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டது.

இதனையடுத்து மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் 26-ந்தேதி- திருவள்ளூர் மாவட்ட போக்சோ சிறப்பு கோர்ட்டு நீதிபதி முன்னிலையில் போலீசார் ராஜீ பிஸ்வாகர்மாவை ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி உமாமகேஸ்வரி, 15-நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து அவர் சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வடமாநில வாலிபர் ராஜீ பிஸ்வாகர்மாவை 7 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த ஆரம்பாக்கம் போலீசார் திருவள்ளூர் போக்சோ நீதிமன்றத்தில் நீதிபதி உமாமகேஸ்வரியிடம் மனு தாக்கல் செய்த நிலையில், ஆகஸ்ட் 2-ந்தேதி வரை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார்.

இந்நிலையில் போலீஸ் காவலில் உள்ள ராஜீ பிஸ்வாகர்மாவை சம்பவ இடமான மாந்தோப்பிற்கு நேரில் அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.

Tags:    

Similar News