தமிழ்நாடு செய்திகள்
null

சட்டசபையில் வெளியிடப்பட்ட 256 திட்டங்களை கைவிட தமிழக அரசு முடிவு- அண்ணாமலை குற்றச்சாட்டு

Published On 2025-09-18 12:17 IST   |   Update On 2025-09-18 12:17:00 IST
  • சொன்னதையும் செய்வோம், சொல்லாததையும் செய்வோம் என்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
  • சொன்னது எதையும் செய்யவில்லை என்பதற்கான சாட்சி, கைவிடப்பட்ட இந்த 256 அறிவிப்புகள்தான்.

சென்னை:

பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:-

ஆட்சிக்கு வந்ததில் இருந்து, வெற்று விளம்பரத்துக்காக அறிவிப்புகளை வெளியிட்டு, நான்கு ஆண்டுகளாக மக்களை ஏமாற்றி வந்த தி.மு.க. அரசு, தற்போது, சட்டசபையில் வெளியிட்ட 256 திட்டங்களை, நிறைவேற்ற சாத்தியமில்லை என்பதால், கைவிடுவதாக முடிவெடுத்துள்ள செய்தி வெளியாகியிருக்கிறது.

கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் 10 சதவீதம் கூட முழுமையாக நிறைவேற்றாமல், நாளொரு நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருந்த தி.மு.க. அரசின் லட்சணம், ஆட்சியின் இறுதி ஆண்டில் பல்லிளித்துக் கொண்டிருக்கிறது. சொன்னதையும் செய்வோம், சொல்லாததையும் செய்வோம் என்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

சொன்னது எதையும் செய்யவில்லை என்பதற்கான சாட்சி, கைவிடப்பட்ட இந்த 256 அறிவிப்புகள்தான். நான்கரை ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில், சொல்லாமல் செய்தது, ஊர் ஊராக அவரது தந்தையின் சிலை வைத்தது மட்டும்தான்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News