தமிழ்நாடு செய்திகள்
தம்பி விஜய் புதிய சாதனைகளை படைக்க வாழ்த்துகிறேன்.. அன்புமணி ராமதாஸ்
- தமிழக வெற்றிக்கழகத் தலைவர் தம்பி விஜய் 51-ஆம் பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.
- தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய்க்கு, அரசியல் கட்சி தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சென்னை:
தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய்க்கு, அரசியல் கட்சி தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக வெற்றிக்கழகத் தலைவர் தம்பி விஜய் 51-ஆம் பிறந்தநாளை இன்று கொண்டாடும் நிலையில், அவருக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீண்ட, நோயில்லா வாழ்வு பெற்று பொதுவாழ்க்கையில் புதிய சாதனைகளை படைக்க வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.