தமிழ்நாடு செய்திகள்

வலுக்கும் மோதல்: அன்புமணி தலையில் இடியை இறக்கிய ராமதாஸ்- வெளியான அறிவிப்பு

Published On 2025-07-06 09:06 IST   |   Update On 2025-07-06 09:45:00 IST
  • பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தலைமையில் வருகிற 8-ந்தேதி மாநில செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • 21 பேர் கொண்ட புதிய நிர்வாக குழுவை அறிவித்துள்ளார்.

பா.ம.க.வில் தந்தை- மகனுக்கு இடையே மோதல் நிலவி வருகிறது. இதனால் இரு தரப்பினரும் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றனர். இதனிடையே, அன்புமணி தரப்பு நிர்வாகிகளை ராமதாஸ் நீக்கி வருகிறார்.

இதனிடையே, நேற்று புதிய நிர்வாக குழுவினருடன் பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் ஆலோசனை நடத்தினார். புதிய பா.ம.க. நிர்வாக குழுவில் ஜி.கே.மணி, முரளி சங்கர், கரூர் பாஸ்கர், அருள், பரந்தாமன், சிவபிரகாசம், தீரன், புதா.அருள்மொழி உள்ளிட்ட நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இக்கூட்டத்தில், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தலைமையில் வருகிற 8-ந்தேதி மாநில செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஓமந்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் செயற்குழு கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பா.ம.க. நிர்வாகக்குழுவில் இருந்து அன்புமணியை நீக்கி டாக்டர் ராமதாஸ் இன்று உத்தரவிட்டார். 21 பேர் கொண்ட புதிய பொறுப்பாளர் பட்டியலை அவர் வெளியிட்டார்.

இதில் டாக்டர் ராமதாஸ், பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி, சிவப்பிரகாசம், பு.தா. அருள்மொழி, தீரன், திருக்கச்சூர் ஆறுமுகம், ஏ.கே. மூர்த்தி, முரளி சங்கர், சையது மன்சூர் உசேன், துரை கவுண்டர், அருள், நெடுங்கீரன், கவிஞர் ஜெய பாஸ்கரன், முத்து குமரன், வைத்தியலிங்கம், அன்பழகன், பரந்தாமன், ம.க ஸ்டாலின், கரூர் பாஸ்கரன், சுஜாதா கருணாகரன், சரவணன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

பா.ம.க.வில் அன்புமணி ஆதரவாளர்களை டாக்டர் ராமதாஸ் நீக்கி வருவதும், அவர்களுக்கு அன்புமணி மீண்டும் பதவி வழங்கி வருவதும் நிர்வாகிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.

Tags:    

Similar News