தமிழ்நாடு செய்திகள்
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறியது அ.ம.மு.க.
- துரோகம் தலைவிரித்து ஆடுவதாக கூறியுள்ள டிடிவி தினகரன் குற்றச்சாட்டு.
- கூட்டணி குறித்த நிலைப்பாடு டிசம்பரில் அறிவிக்கப்படும் என்று கூறிய நிலையில் திடீர் முடிவு.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அமமுக வெளியேறுவதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
துரோகம் தலைவிரித்து ஆடுவதாக கூறியுள்ள டிடிவி தினகரன், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் விலகுவதாக தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, என்டிஏ கூட்டணியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் விலகியதை தொடர்ந்து, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் விலகுவதாக அறிவித்துள்ளார்.
கூட்டணி குறித்த நிலைப்பாடு டிசம்பரில் அறிவிக்கப்படும் என்று கூறிய நிலையில் திடீர் முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.