தமிழ்நாடு செய்திகள்

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது

Published On 2025-03-05 10:07 IST   |   Update On 2025-03-05 10:19:00 IST
  • அனைத்துக்கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை ஜனாதிபதியிடம் அளிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
  • அனைத்து கட்சி கூட்டத்தை பா.ஜ.க., த.மா.கா., நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ளன.

சென்னை:

தொகுதி மறுசீரமைப்பு குறித்து முக்கிய முடிவு எடுப்பதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது.

இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து சில கட்சிகள் மனு அளித்ததால் பரிசீலித்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, 56 கட்சிகள், இயக்கங்கள் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்றுள்ளன.

தொகுதி மறுவரையறைக்கு எதிரான அனைத்துக்கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை ஜனாதிபதியிடம் அளிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அனைத்து கட்சி கூட்டத்தை பா.ஜ.க., த.மா.கா., நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ளன. 



Tags:    

Similar News