தமிழ்நாடு செய்திகள்

திருச்சியில் இருந்து சென்னைக்கு இயக்கப்படவிருக்கும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தை காணலாம்

வருகிற 23-ந்தேதி திருச்சியில் இருந்து சென்னைக்கு விமான சேவையை தொடங்கும் ஏர் இந்தியா

Published On 2025-02-04 09:45 IST   |   Update On 2025-02-04 09:45:00 IST
  • விடுமுறை நாட்களில் அதிக அளவிலான கட்டணத்தை செலுத்தி பயணிக்கும் நிலை இருந்து வந்தது.
  • சென்னையில் இருந்து திருச்சிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் புதிய சேவையை வழங்க உள்ளது.

கே.கே.நகர்:

திருச்சி விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகளாக பல்வேறு நாடுகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது.

உள்நாட்டு விமான சேவைகளாக சென்னை, பெங்களூரு, மும்பை ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த உள்நாட்டு விமான சேவைகளை இண்டிகோ நிறுவனம் மட்டுமே இயக்கி வந்தது. இதனால் விடுமுறை நாட்களில் அதிக அளவிலான கட்டணத்தை செலுத்தி பயணிக்கும் நிலை இருந்து வந்தது.

இந்த நிலையில் வரும் மார்ச் 23-ந் தேதி முதல் திருச்சியில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து திருச்சிக்கும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் புதிய சேவையை வழங்க உள்ளது.

இந்த விமானம் ஆனது மாலை 6:45 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு திருச்சி விமான நிலையத்திற்கு இரவு 7:45 மணிக்கு வந்தடையும். மீண்டும் இந்த விமானம் இரவு 8 15 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு இரவு 9:15 மணிக்கு சென்னை விமான நிலையத்தை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஏற்கனவே இண்டிகோ நிறுவனம் திருச்சி சென்னைக்கு 5 சேவைகளை வழங்கி வரும் நிலையில் ஆறாவது சேவையாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் விமான சேவையை தொடங்குவது அனைவரின் எதிர்பார்ப்பிற்கும் உட்பட்டது என குறிப்பிடப்பட்டுள்ளது

Tags:    

Similar News