தமிழ்நாடு செய்திகள்

அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் தொடங்கியது

Published On 2025-05-02 17:21 IST   |   Update On 2025-05-02 17:21:00 IST
  • கூட்டத்துக்கு அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமை தாங்குகிறார்.
  • தி.மு.க.வை வீழ்த்த தேவையான வியூகங்கள் பற்றி எடப்பாடி பழனிசாமி விளக்குவார்.

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு அ.தி.மு.க., பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்துள்ளது. பா.ஜனதாவுடன் கூட்டணி அமைப்பதை டி.ஜெயக்குமார் உள்பட மூத்த நிர்வாகிகள் சிலர் விரும்பவில்லை.

அவர்கள் வெளிப்படையாகவே தங்கள் அதிருப்தியை வெளியிட்டார்கள். பின்னர் கட்சி கட்டுப்பாடு கருதி அமைதியாகி விட்டார்கள்.

இந்த சூழ்நிலையில் கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று மாலை 4.30 மணிக்கு தலைமை கழகத்தில் தொடங்கியது. கூட்டத்துக்கு அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமை தாங்குகிறார்.

கூட்டணி அமைந்த பிறகு நடத்தப்படும் முதல் செயற்குழு என்பதால் இந்த செயற்குழுக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

கூட்டத்தில் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைக்கப்பட்டது ஏன்? தி.மு.க.வை வீழ்த்த தேவையான வியூகங்கள் பற்றி எடப்பாடி பழனிசாமி விளக்குவார் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் கூட்டணி தொடர்பான அதிருப்தியை கட்சியினரிடம் போக்குவதற்கும் அவர் திட்டமிட்டுள்ளார்.

Tags:    

Similar News