தமிழ்நாடு செய்திகள்

12 ஆண்டுகளுக்குப் பின்.. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குடமுழுக்கு.. தேதி, நேரம் அறிவிப்பு

Published On 2025-06-06 21:14 IST   |   Update On 2025-06-06 21:14:00 IST
  • காலை 6.15 முதல் 6.50 வரை கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றும் நிகழ்ச்சி நடைபெறும்.
  • திருக்கோயிலின் உப கோயில்களுக்கு குடமுழு நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் குடமுழுக்கு விழா விழா தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 12 ஆண்டுகளுக்கு பின் வரும் ஜூலை 7ம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது.

காலை 6.15 முதல் 6.50 வரை கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றும் நிகழ்ச்சி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் உப கோயில்களான, ஆனந்தவல்லி அம்பாள் திருக்கோயில், சிவக்கொழுந்தீஸ்வரர் ஆலயம் என்ற சிவன் கோயில், வெயிலு கந்தம்மன் கோயில், ஸ்ரீ அமிர்த குண விநாயகர் மற்றும் ஸ்ரீ சொர்ணவர்ண சாஸ்தா கோயில்களில் இன்று (ஜூன் 6) குடமுழுக்கு விழாக்கள் நடைபெற்றன.

Tags:    

Similar News