தமிழ்நாடு செய்திகள்

அ.தி.மு.க. சார்பில் "மே தின" பொதுக்கூட்டங்கள்- எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

Published On 2025-04-20 15:44 IST   |   Update On 2025-04-20 15:44:00 IST
  • புதுச்சேரி மாநிலத்திலும், வருகிற 1-ந் தேதி வியாழக்கிழமை அன்று "மே தின விழா பொதுக்கூட்டங்கள்" நடைபெற உள்ளன.
  • பொதுக் கூட்டங்களில் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களும், முன்னாள் அமைச்சர்களும் சிறப்புரையாற்றுவார்கள்.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

"மே" தினத்தைக் கொண்டாடும் வகையில், அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் சார்பில், அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும்,

புதுச்சேரி மாநிலத்திலும், வருகிற 1-ந் தேதி வியாழக்கிழமை அன்று "மே தின விழா பொதுக்கூட்டங்கள்" நடைபெற உள்ளன.

இந்த கூட்டங்களில் கழக சட்டமன்ற உறுப்பினர்களும், முன்னாள் அமைச்சர்களும், கழக சார்பு அணிகளின் துணை நிர்வாகிகளும், கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News