தமிழ்நாடு செய்திகள்
எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை
- மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனி விமானம் மூலம் இன்று இரவு சென்னை வருகிறார்.
- முக்கிய அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் டெல்லியில் இருந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனி விமானம் மூலம் இன்று இரவு சென்னை வருகிறார்.
மத்திய அமைச்சர் அமித்ஷா, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் உள்பட முக்கிய அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்தில் மூத்த நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாளை அமித்ஷாவை சந்திக்க வாய்ப்புள்ள நிலையில் நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.