தமிழ்நாடு செய்திகள்
அ.தி.மு.க. இணைந்தால் தான் தேர்தலில் வெற்றி பெற முடியும்- ஓ.பன்னீர் செல்வம்
- புதிய வாக்காளர்களை சேர்ப்பதற்கு தேர்தல் ஆணையம் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும்.
- டிடிவி தினகரன், சசிகலாவை தனித்தனியாக சந்தித்து ஆலோசனை மேற்கொண்டேன்.
SIR பணிகளுக்கு காலக்கெடுவை தேர்தல் ஆணையம் நீடிக்க வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் மேலும் பேசிய அவர் கூறியதாவது:-
SIR பணிகளுக்கு தேர்தல் ஆணையம் கால அவகாசம் கொடுக்காதது தவறான நடைமுறை.
புதிய வாக்காளர்களை சேர்ப்பதற்கு தேர்தல் ஆணையம் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும்.
அதிமுக இணைந்தால் தான் வெற்றி பெற முடியும். அதிமுக அணிகள் இணைப்பதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.
டிடிவி தினகரன், சசிகலாவை தனித்தனியாக சந்தித்து ஆலோசனை மேற்கொண்டேன்.
அரசியலில் இருந்து தன்னை யாரும் தனிமைப்படுத்த முடியாது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.