தமிழ்நாடு செய்திகள்

அரசியலமைப்பு சட்டத்தைக் காப்போம் - ஆதவ் அர்ஜுனா

Published On 2025-11-26 10:09 IST   |   Update On 2025-11-26 10:09:00 IST
  • 'இந்திய மக்களாகிய நாம்' என்று தொடங்கும் அதன் முதல் வரி நமது ஒற்றுமை, அனைவருக்குமான பிரதிநிதித்துவம், கூட்டுறவு வாழ்க்கை போன்றவற்றைக் குறிப்பிடுகிறது.
  • நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற பொன்விதிகள் இந்தியத் திருநாட்டின் சிறப்பை பிரதிபலிக்கிறது.

இந்திய அரசியலமைப்பு தினக் கொண்டாட்டத்தை ஒட்டி தமிழக வெற்றிக்கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

இந்திய குடிமக்கள் சாதி, மதம், இனம், பாலினம் போன்ற எந்தவித பாகுபாடுகளுக்கும் இடமில்லாமல் 'அனைவரும் சமம்' என்று பிரகடனம் செய்த ஆவணம் அரசியலமைப்பு சட்டம். 'இந்திய மக்களாகிய நாம்' என்று தொடங்கும் அதன் முதல் வரி நமது ஒற்றுமை, அனைவருக்குமான பிரதிநிதித்துவம், கூட்டுறவு வாழ்க்கை போன்றவற்றைக் குறிப்பிடுகிறது. நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற பொன்விதிகள் இந்தியத் திருநாட்டின் சிறப்பை பிரதிபலிக்கிறது.

இந்திய ஜனநாயகத்தின் ஆவணமாகவும், இந்தியர்களுடைய மதச்சார்பின்மையின் அடையாளமாகவும் உள்ள அரசியலமைப்பு சட்டத்தைக் காப்போம் என்று 'அரசியலமைப்பு தினமான' இன்று உறுதியேற்போம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News