தமிழ்நாடு செய்திகள்
தமிழ்நாட்டில் 5 கோடி SIR படிவங்கள் விநியோகம் - தேர்தல் ஆணையம்
- 12 மாநிலங்களில் SIR மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- தமிழ்நாட்டில் SIR படிவங்கள் 78.09% விநியோகிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம் உள்ளிட்டவைகள் மேற்கொள்காட்டி திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழ்நாட்டில் SIR நடவடிக்கை தொடரலாம் என உத்தரவிட்டது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் SIR படிவங்கள் 78.09% விநியோகிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 6.41 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில் 5 கோடி SIR படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.