தமிழ்நாடு செய்திகள்
திருவள்ளூரில் முழு கொள்ளளவை எட்டிய 39 ஏரிகள்
- திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 336 ஏரிகளில் 39 ஏரிகள் முழுமையாக நிரம்பின.
- 57 ஏரிகள் 75 சதவீதமும், 88 ஏரிகள் 51 சதவீதமும், 31 ஏரிகள் 26 சதவீதமும் நிரம்பி உள்ளன.
சென்னையை மிரட்டிய ஃபெஞ்சல் புயல் நள்ளிரவில் மாமல்லபுரம் - புதுச்சேரி இடையே கரையைக் கடந்தது. இதனால் மழை படிப்படியாக குறைந்து வருகிறது.
இந்நிலையில் ஃபெஞ்சல் புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் 39 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது. புயல் எதிரொலியாக கனமழை பெய்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 336 ஏரிகளில் 39 ஏரிகள் முழுமையாக நிரம்பின.
திருவள்ளூர் மாவட்டத்தில் 57 ஏரிகள் 75 சதவீதமும், 88 ஏரிகள் 51 சதவீதமும், 31 ஏரிகள் 26 சதவீதமும் நிரம்பி உள்ளன.