தமிழ்நாடு செய்திகள்

நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்களில் இதுவரை 1.49 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர் - முதலமைச்சர் பெருமிதம்

Published On 2025-08-23 20:54 IST   |   Update On 2025-08-23 20:54:00 IST
  • மக்களின் உடல்நலனைக் காப்பதிலும் தமிழ்நாடுதான் ‘நம்பர் 1’
  • நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்களில் இதுவரை 3 வாரங்கள் நிறைவுற்றுள்ளன.

'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாம் என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்தத் திட்டத்திலன் கீழ் ரத்தப் பரிசோதனைகள், சர்க்கரை நோய், இருதய நோய் என எல்லாவிதமான பரிசோதனையும் அனைத்து தரப்பு மக்களும் இலவசமாக செய்து கொள்ள முடியும். ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை நடைபெறும் இந்த முகாம்களில் மக்கள் ஆர்வமாக கலந்து கொண்டு பரிசோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டம் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஆகஸ்ட் 2 தொடங்கி, சனிக்கிழமைதோறும் நடைபெற்று வரும் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்களில் இதுவரை 3 வாரங்கள் நிறைவுற்றுள்ளன.

முதல் வாரம் ( ஆகஸ்ட் 2) - 44,795 மருத்துவப் பயனாளிகள்

இரண்டாம் வாரம் (ஆகஸ்ட் 9) - 48,046 மருத்துவப் பயனாளிகள்,

மூன்றாம் வாரம் (ஆகஸ்ட் 23) - 56,245 மருத்துவப் பயனாளிகள் பயன்பெற்றுள்ளனர்.

மருத்துவ சேவை வழங்குவதிலும் - மக்களின் உடல்நலனைக் காப்பதிலும் தமிழ்நாடுதான் 'நம்பர் 1' என உறுதிசெய்வோம்!" என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News