தமிழ்நாடு செய்திகள்

பெயர் சூட்டும் நிகழ்வில் நடந்த துயரம்: வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் குழந்தை உயிரிழப்பு

Published On 2025-11-12 17:01 IST   |   Update On 2025-11-12 17:01:00 IST
  • பெயர் சூட்டும் நிகழ்வில் வீட்டின் மேற்கூரைப் பூச்சு இடிந்து விழுந்தது
  • உயிரிழந்த குழந்தையின் தாயார் ராதா மகேஸ்வரி மருத்துவமனையில் அனுமதி

தூத்துக்குடி அருகே குழந்தைக்கு பெயர் சூட்டும் நிகழ்வில் வீட்டின் மேற்கூரைப் பூச்சு இடிந்து விழுந்ததில், விழாவுக்கு வந்த எதிர்வீட்டைச் சேர்ந்த பெண்ணின் 11 மாதக் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்த குழந்தையின் தாயார் ராதா மகேஸ்வரிக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவில் நடந்த இந்த துயரம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

Similar News