தமிழகத்திற்கு மேலும் 10 தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் வரவழைப்பு
- தமிழகத்தில் 14 தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- கூடுதலாக புனே, வதோதராவில் இருந்து 10 NDRF குழுக்கள் தமிழகம் வர உள்ளன.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகி உள்ள டிட்வா புயல் சென்னைக்கு தென்கிழக்கே 400 கி.மீ. தொலைவில் உள்ளது. டிட்வா புயல் மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. டிட்வா புயல் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 30-ந்தேதி வட தமிழ்நாடு, புதுவை, ஆந்திர கடற்கரைகளுக்கு அருகே தென்மேற்கு வங்கக்கடலை வந்தடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டிட்வா புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், டிட்வா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்திற்கு கூடுதல் தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் வரவழைக்கப்பட்ட உள்ளதாக துணை கமாண்டர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில்,
தமிழகத்தில் 14 தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில் மேலும் 10 குழு வரவழைக்கப்பட உள்ளனர்.
கூடுதலாக புனே, வதோதராவில் இருந்து 10 NDRF குழுக்கள் தமிழகம் வர உள்ளன. 5 அணிகள் சென்னையிலும், 5 அணிகள் விழுப்புரத்திலும் நிறுத்தப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.