தமிழ்நாடு செய்திகள்
திருமண ஆசைகாட்டி அழைத்து சென்று மாணவிக்கு பாலியல் தொல்லை- வாலிபர் கைது
- கடந்த 25-ந் தேதி பள்ளிக்குச் சென்ற மாணவி பின்னர் திரும்பி வரவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
- யுவராஜ் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
திருநின்றவூர்:
ஆவடியை அடுத்த முத்தாப்புதுபேட்டை பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஆவடியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு திருவள்ளூரில் உள்ள தோழி ஒருவரது உறவினரான யுவராஜ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
இந்நிலையில் கடந்த 25-ந் தேதி பள்ளிக்குச் சென்ற மாணவி பின்னர் திரும்பி வரவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து முத்தா புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. விசாரணையில் யுவராஜ், மாணவியிடம் திருமண ஆசைகாட்டி அழைத்துச் சென்று பாலியல் தொல்லை செய்து இருப்பது தெரிந்தது.
இந்த நிலையில் மாணவியை போலீசார் மீட்டனர். பின்னர் அவரை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். யுவராஜ் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை புழல் சிறையில் அடைத்தனர்.