தமிழ்நாடு செய்திகள்

அனைவரும் ஒன்றிணைந்தே செயல்படுகிறோம்- ஜெயக்குமார் பேட்டி

Published On 2023-03-03 10:33 IST   |   Update On 2023-03-03 14:11:00 IST
  • அ.தி.மு.க. எழுச்சியாகவே இருக்கிறது. அதே நேரத்தில் வேகமாகவும் இருக்கிறது.
  • வரும் காலங்களில் வீறு கொண்டு மகத்தான வெற்றியை பெறும் வகையில் கட்சி எழுச்சியாக உள்ளது.

சென்னை:

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

அ.தி.மு.க.வில் தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் ஒன்றரை கோடி தொண்டர்கள் என அனைவருமே ஒற்றுமையாக ஒருங்கிணைந்தே செயல்படுகிறோம்.

காமாலைக்காரர்கள் கண்களுக்கு காண்பதெல்லாம் மஞ்சளாக தெரிவதை போல சிலரின் காமாலை கண்களுக்கு மஞ்சளாக தெரிகிறது.

அ.தி.மு.க. எழுச்சியாகவே இருக்கிறது. அதே நேரத்தில் வேகமாகவும் இருக்கிறது. வரும் காலங்களில் வீறு கொண்டு மகத்தான வெற்றியை பெறும் வகையில் கட்சி எழுச்சியாக உள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பொருத்தவரை தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் பெரிய அளவில் பயந்தன. எந்த தேர்தலிலும் அவர்கள் இதுபோல் பயந்தது கிடையாது. இதனால் ரூ.350 கோடி செலவு செய்து போலியாக வெற்றியை பெற்றுள்ளனர். பணத்தை வாரி இறைத்தனர். இதனால் பணம் பாதாளம் வரை பாய்ந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News