தமிழ்நாடு செய்திகள்

பள்ளியில் மாணவர்கள் காலை உணவு சாப்பிட கிராம மக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்களுக்கு கலெக்டர் பிரபுசங்கர் அறிவுரை வழங்கியபோது எடுத்த படம்.

காலை உணவு திட்டத்தில் பட்டியலின பெண் சமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு: கலெக்டர் எச்சரிக்கையால் சுமூக தீர்வு

Published On 2023-09-06 10:21 IST   |   Update On 2023-09-06 12:47:00 IST
  • கலெக்டர் காலை உணவின் தரம், அளவு ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
  • காலை உணவு சமைப்பது குறித்து எதிர்ப்பு தெரிவித்தவர்களுக்கு, கலெக்டர் அறிவுரை வழங்கினார்.

கரூர்:

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே வேலன் செட்டியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் முதல்-அமைச்சர் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த சுமதி என்ற பெண் சமைப்பதற்காக பணி அமர்த்தப்பட்டுள்ளார்.

இந்த பெண் பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், பள்ளியில் சமையல் பணி செய்யக்கூடாது. அப்படி செய்தால் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள் என்று, ஊர் பொதுமக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மாவட்ட கலெக்டரிடம், சமூக ஆர்வலர் ராஜகோபால் மற்றும் தோழர் களம் அமைப்பினர் புகார் அளித்தனர்.

உடனே கலெக்டர் பிரபுசங்கர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிக்கு சென்றனர். அங்கு கலெக்டர் உணவின் தரம், அளவு ஆகியவற்றை ஆய்வு செய்தார். மேலும் காலை உணவு உண்ணாத, 15 குழந்தைகளின் பெற்றோரை விசாரணை செய்தார்.

அருந்ததியர் சமூக பெண் சமைத்தால் தம்முடைய குழந்தை உணவு சாப்பிடாது, வேண்டுமென்றால் குழந்தையின் பள்ளி மாற்று சான்றிதழ் பெற்றுக் கொள்கிறேன், என தெரிவித்தார்.

இதையடுத்து எதிர்ப்பு தெரிவித்த பாலசுப்பிரமணியன் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு தொடுக்கப்படும் என, கலெக்டர் பிரபுசங்கர் எச்சரிக்கை விடுத்தார்.

இதை தொடர்ந்து, அவர் தன் குழந்தையை காலை உணவு உண்ண ஏற்பாடு செய்யப்படும் என மன்னிப்பு கேட்டதன் அடிப்படையில், வழக்கு தொடுக்காமல் எச்சரித்து விடுவிக்கப்பட்டார். மேலும் காலை உணவு சமைப்பது குறித்து எதிர்ப்பு தெரிவித்தவர்களுக்கு, கலெக்டர் அறிவுரை வழங்கினார்.

Tags:    

Similar News