தமிழ்நாடு செய்திகள்

எம்.ஜி.ஆரின் பிரசார காரை பரிசாக பெற்றவர்

Published On 2023-12-29 10:19 IST   |   Update On 2023-12-29 10:19:00 IST
  • எம்.ஜி.ஆர். மீதும் அவருடைய மனைவி ஜானகி எம்.ஜி.ஆர். மீதும் அளவு கடந்த மரியாதையை வைத்திருந்தார் விஜயகாந்த்.
  • விஜயகாந்த் பொழுதுபோக்கு கிரிக்கெட், கால்பந்து மற்றும் திரைப்படங்கள் பார்ப்பது ஆகும்.

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். மீதும் அவருடைய மனைவி ஜானகி எம்.ஜி.ஆர். மீதும் அளவு கடந்த மரியாதையை வைத்திருந்தார் விஜயகாந்த்.

எம்.ஜி.ஆர். மறைவுக்கு பின்னர், அவரது இல்லமான ராமாவரம் தோட்டத்தில் உள்ள காதுகேளாதோர் பள்ளிக்கு அடிக்கடி சென்று உதவிகளை செய்து வந்தார். அப்போதெல்லாம் ஜானகி அம்மாளையும் சந்திப்பது வழக்கம்.

அப்படி ஒருமுறை ஜானகி அம்மாளை சந்தித்தபோது, தேர்தல் பிரசாரத்துக்கு எம்.ஜி.ஆர். பயன்படுத்திய வாகனத்தை விஜயகாந்துக்கு பரிசாக வழங்கினார் ஜானகி அம்மாள். எம்.ஜி.ஆர் மற்றும் என்.டி.ஆரின் தீவிர ரசிகரான இவரின் பொழுதுபோக்கு கிரிக்கெட், கால்பந்து மற்றும் திரைப்படங்கள் பார்ப்பது ஆகும்.

Tags:    

Similar News