தமிழ்நாடு செய்திகள்
வேலூர், அரக்கோணம் தொகுதி நிர்வாகிகளுடன் உதயநிதி ஆலோசனை
- பாராளுமன்ற தொகுதி தி.மு.க. நிர்வாகிகளை சென்னை அறிவாலயத்தில் தொகுதி வாரியாக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்தித்து வருகின்றனர்.
- மாலையில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி நிர்வாகிகளுடன் சந்திப்பு நடக்கிறது.
சென்னை:
பாராளுமன்ற தொகுதி தி.மு.க. நிர்வாகிகளை சென்னை அறிவாலயத்தில் தொகுதி வாரியாக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்தித்து வருகின்றனர். வேலூர், அரக்கோணம் பாராளுமன்ற தொகுதியை சேர்ந்த நிர்வாகிகள் காலையில் சந்தித்தனர். அவர்களுடன் முதன்மை செயலாளர் கே.என்.நேரு, அமைச்சர்கள் எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
மாலையில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி நிர்வாகிகளும், நாளை காலையில் வடசென்னை, தென்சென்னை நிர்வாகிகளும், மாலையில் மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர் நிர்வாகிகளுடன் சந்திப்பு நடக்கிறது.