தமிழ்நாடு

வீரப்பன் மகள் வித்யாவும் வேட்பாளராக களம் இறங்குகிறார்

Published On 2024-03-23 05:45 GMT   |   Update On 2024-03-23 05:45 GMT
  • நாம் தமிழர் கட்சியில் இணைந்து தீவிரமாக பணியாற்ற தயாராக இருப்பதாக கூறினார்.
  • அதிகாரப் பூர்வ அறிவிப்பை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவிக்க உள்ளார்.

சந்தன கடத்தல் வீரப்பனின் மகள் வித்யாராணி 4 ஆண்டுகளுக்கு முன்பு பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து அரசியலில் ஈடுபட்டார். பாரதிய ஜனதாவில் தனக்கு முக்கிய பொறுப்புகள் தருவார்கள் என்று எதிர்பார்த்தார்.

ஆனால் பாரதிய ஜனதாவில் அவருக்கு உரிய இடம் கிடைக்கவில்லை. இதனால் பா.ஜ.க. கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்து வந்தார்.

இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு மீண்டும் அவரது நடவடிக்கைகள் தீவிரமாகி உள்ளன. கடந்த மாதம் அவர் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானை சந்தித்து பேசினார். அப்போது நாம் தமிழர் கட்சியில் இணைந்து தீவிரமாக பணியாற்ற தயாராக இருப்பதாக கூறினார்.

அதை சீமானும் ஏற்றுக் கொண்டதால் வித்யாராணி நாம் தமிழர் கட்சியில் இணைந்து இருப்பதாக தெரிகிறது. அவரை மீண்டும் பாரதிய ஜனதாவில் செயல்பட வைக்க சிலர் முயற்சி செய்தனர். ஆனால் அதற்கு வெற்றி கிடைக்கவில்லை.

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் வித்யாராணி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது உறுதியாகி இருக்கிறது. அவர் கிருஷ்ணகிரி தொகுதியில் நாம் தமிழர் வேட்பாளராக களம் இறங்குகிறார். இன்று (சனிக்கிழமை) மாலை இதற்கான அதிகாரப் பூர்வ அறிவிப்பை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவிக்க உள்ளார்.

Tags:    

Similar News