தமிழ்நாடு

விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கிய வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய தாமதம் ஏன்?- நீதிபதி கேள்வி

Published On 2023-12-01 10:37 GMT   |   Update On 2023-12-01 10:37 GMT
  • விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட அருண்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
  • வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசு தரப்பு தாமதிக்காமல் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.

மதுரை:

நெல்லை மாவட்டம் அம்பை போலீஸ் சரகத்தில் அம்பை, கல்லிடைக்குறிச்சி, வி.கே.புரம், பாப்பாக்குடி, அம்பை மகளிர் உள்ளிட்ட போலீஸ் நிலையங்கள் உள்ளன.

இந்த சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் விசாரணைக்கு அழைத்து சென்றவர்களை அப்போதைய உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட அருண்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசுத்தரப்பு தாமதிக்காமல் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். பதில் மனு தாக்கல் செய்யாவிட்டால் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்று கூறிய நீதிபதி, வழக்கு விசாரணையை வரும் 15ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Tags:    

Similar News