தமிழ்நாடு செய்திகள்
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி டெல்லி பயணம்
- இரண்டு நாள் பயணமாக டெல்லி புறப்பட்டுள்ளார்
- மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்திக்க இருப்பதாக தகவல்
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இரண்டு நாள் பயணமாக இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். இரண்டு நாள் பயணமாக டெல்லி செல்லும் அவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆளுநர் டெல்லி சென்ற விமானத்திலும் திமுக எம்.பி. கனிமொழியும் பயணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.