தமிழ்நாடு

கட்டணம் இல்லாமல் வெள்ளம் பாதித்த 4 மாவட்டங்களுக்கு நிவாரண பொருட்களை அனுப்ப அரசு ஏற்பாடு

Published On 2023-12-20 05:52 GMT   |   Update On 2023-12-20 05:52 GMT
  • வெள்ளம் பாதித்த பகுதிகளில் தற்போது தண்ணீர் வடிந்து வருவதால் மக்கள் மின்சார இணைப்பு, நெட்வொர்க் வசதியை பெற்றுள்ளனர்.
  • தமிழகம் முழுவதும் இயக்கப்படும் அரசு விரைவு பஸ்களில் உள்ள சுமை பெட்டிகள் மூலம் அனுப்புவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

சென்னை:

வடகிழக்கு பருவமழை தென் மாவட்டங்களில் இயல்பை விட அதிகமாக பெய்து பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி விட்டது.

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பெய்த கன மழையால் வெள்ளை பாதிப்பு ஏற்பட்டது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் தற்போது தண்ணீர் வடிந்து வருவதால் மக்கள் மின்சார இணைப்பு, நெட்வொர்க் வசதியை பெற்றுள்ளனர். அவர்களுக்கு உணவு, குடிநீர் போன்ற அடிப்படை தேவைகள் மாவட்ட கலெக்டர்கள் மூலமாக செய்யப்பட்டு வருகின்றன. தன்னார்வ நிறுவனங்களும், மக்களுக்கு உதவி செய்து வருகின்றன.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து நிவாரண பொருட்கள் அனுப்பப்படுகின்றன.

இந்த நிலையில் அரசு விரைவு பஸ்களில் கட்டணம் இல்லாமல் நிவாரணப் பொருட்களை அனுப்ப அரசு ஏற்பாடு செய்துள்ளது.

போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரின் அறிவுறுத்தலின்படி நெல்லை, தூத்துக்குடி தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர்களுக்கு நிவாரண பொருட்கள் கட்டணமின்றி இலவசமாக அனுப்பப்படும் என்று அரசு விரைவு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் இளங்கோவன் தெரிவித்து உள்ளார்.

தமிழகம் முழுவதும் இயக்கப்படும் அரசு விரைவு பஸ்களில் உள்ள சுமை பெட்டிகள் மூலம் அனுப்புவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

பொதுமக்கள், தன்னார்வலர்கள் நிவாரணப் பொருட்கள் அனுப்ப இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News