தமிழ்நாடு

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக, உணவு பொருட்கள் மதுரையில் தயார் செய்யப்படுவதை காணலாம்.

உணவு, நிவாரண பொருட்கள் வழங்க விரும்புவோர் சிறப்பு குழுக்களை அணுகலாம்: தமிழக அரசு

Published On 2023-12-20 03:17 GMT   |   Update On 2023-12-20 03:55 GMT
  • தூத்துக்குடி மாவட்டத்துக்கு செந்தில்ராஜ் ஒருங்கிணைப்பு அலுவலராக நியமிக்கப்படுகிறார்.
  • நிவாரண பொருட்களை வழங்க விரும்புவோர் மற்றும் தன்னார்வலர்கள் அலுவலர்களை தொடர்புகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சென்னை:

கனமழை, வெள்ளத்தால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு, நிவாரண பொருட்களை வழங்க பலர் முன்வந்துள்ளனர். இந்த பணியை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மூலம் ஒருங்கிணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்துக்கு செந்தில்ராஜ் ஒருங்கிணைப்பு அலுவலராக நியமிக்கப்படுகி றார். அவரது செல்போன் எண் 7397770020 ஆகும். பாதுகாப்பு மற்றும் நிவாரண பொருட்களை வழங்கும் மையமாக தூத்துக்குடியில் உள்ள உள்விளையாட்டரங்கம் செயல்படும்.

தூத்துக்குடியில் உள்ள இந்த கட்டுப்பாட்டு அறை பொறுப்பு அலுவலர்களாக கூடுதல் கலெக்டர் ஐஸ்வர்யா (செல்போன் எண்-8973743830), தூத்துக்குடி மாநகராட்சி துணை ஆணையர் ராஜாராம் (9943744803), கலெக்டரின் நேர்முக உதவியாளர் அமுதா (9445008155) ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர்.

நெல்லை மாவட்டத்தில் இந்த பணிகளை ஒருங்கிணைக்க நெல்லை மாவட்ட நகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் (9442218000) நியமிக்கப்பட்டுள்ளார்.

நெல்லை உதவி கலெக்டர் (பயிற்சி) கிஷன் குமார் (9123575120), நெல்லை மாவட்ட சிறப்பு வருவாய் அலுவலர் ரேவதி (9940440659) ஆகியோர் இந்த பணியை ஒருங்கிணைப்பார்கள்.

இந்த பணிகளுக்கான மாநில ஒருங்கிணைப்பாளராக உள்துறை முதன்மை செயலாளர் அமுதா செயல்படுவார். நிவாரண பொருட்களை வழங்க விரும்புவோர் மற்றும் தன்னார்வலர்கள் மேற்காணும் அலுவலர்களை தொடர்புகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News