விமர்சனத்துக்கு உள்ளான அண்ணாமலையின் 'QUOTA' பேச்சு
- அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் பிஎஸ்ஜி கல்லூரியில் படித்தவர்.
- மேலும், அகமதாபாத் ஐஐஎம்-வில் எம்.பி.ஏ. பட்டம் வாங்கியவர்.
கோவை தொகுதியில் பா.ஜனதா சார்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. கோவிந்தராஜ் மகன் சிங்கை ராமச்சந்திரன் போட்டியிடுகிறார். அண்ணாமலை கோவை தொகுதி வேட்பாளராக அறிவித்ததும், அதிமுக வேட்பாளராக சிங்கை ராமச்சந்திரன், அண்ணாமலைக்காக காத்திருக்கிறேன். எந்தமொழியிலும் பதில் அளிக்க தயார் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில்தான் எல்லா அடையாளம் கொடுத்த கோவைக்கு, சேவை செய்ய பா.ஜனதா வாய்ப்பு அளித்துள்ளது என அண்ணாலை தெரிவித்தார்.
அண்ணாலை கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் படித்தவர். அதே கல்லூரியில்தான் சிங்கை ராமசந்திரனும் படித்தார். தனக்கு மதிப்பெண் மூலமாக பிஎஸ்ஜி கல்லூரியில் இடம் கிடைத்ததாகவும், சிங்கை ராமச்சந்திரனுக்கு அவரது அப்பா எல்.எல்.ஏ. ஒதுக்கீடு மூலம் இடம் கிடைத்ததாகவும் கூறினார். மேலும் சிங்கை ராமச்சந்திரன் அகமதாபாத் ஐஐஎம்-வில் படித்தவர்.
சிங்கை ராமச்சந்திரன் தந்தை கோவிந்தராஜ் 1991 முதல் 1996 வரை எம்.எல்.ஏ.-வாக இருந்தார். அப்போது சிங்கை ராமச்சந்திரனுக்கு வயது 11. சிங்கை ராமச்சந்திரன் கல்லூரியில் 2002-ம் ஆண்டு சேருவதற்கு முன்னதாகவே இறந்துவிட்டார். இறந்து போன ஒருவர் எப்படி கல்லூரியில் இடம் வாங்கித் தர முடியும்? என சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பப்பட்டது.
மேலும், ஐ.ஐ.எம். அகமதாபாத்தில் எம்.பி.ஏ. பட்டம் வாங்கியவர் சிங்கை ராமச்சந்திரன். அதுவுமா எம்.எல்.ஏ கோட்டா? என கேள்வி எழுப்பியுள்ளனர்
நீங்களாவது கேக்கலாம்ல. கம்முன்னு வேடிக்கை பாத்துக்கிட்டு இருக்கீங்க... என வானதி ஸ்ரீனிவாசன் நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார்.
அண்ணாமலை அடிக்கடி தான் மட்டும்தான் கஷ்டப்பட்டு படித்து வருவதாக பேசி வருகிறார். மேலும் மைக் பிடித்து பேசும்போது இல்லாதையெல்லாம் பேசி வருகிறார் என விமர்சனம் வைக்கப்பட்டு வரும் நிலையில், பலரும் அண்ணாமலைக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே வானதி ஸ்ரீனிவாசன் மகனும் பிஎஸ்ஜி கல்லூரியில்தான் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.