தமிழ்நாடு செய்திகள்

வரும் 15-ந்தேதி வரை சட்டமன்ற கூட்டத்தொடர்: சபாநாயகர் அறிவிப்பு

Published On 2024-02-12 11:44 IST   |   Update On 2024-02-12 13:29:00 IST
  • 15-ந்தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிலுரை வழங்குகிறார்.
  • 19-ந்தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

தமிழக சட்டமன்றம் இன்று கூடியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் கவர்னர் உரையுடன் சட்டமன்றம் தொடங்கியது. கவர்னர் பல்வேறு காரணங்களை கூறி, ஆளுநர் உரையை படிக்க மறுத்து அவரது இருக்கையில் அமர்ந்தார். பின்னர் சபாநாயகர் தமிழில் ஆளுநர் உரையை படித்தார்.

சட்டமன்ற கூட்டம் முடிந்த உடன் சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அதன்பின், வருகிற 15-ந்தேதி வரை சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். ஆளுநர் உரை மீதான விவாதம் மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகிற 15-ந்தேதி பதிலுரை வழங்குவார் எனக் குறிப்பிட்டார்.

மேலும், வருகிற 19-ந்தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். 22-ந்தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார்.

Similar News