தமிழ்நாடு

சிறைத்தண்டனை பெற்று அமைச்சர் பதவியை இழக்கும் 3-வது நபர்

Published On 2023-12-21 06:09 GMT   |   Update On 2023-12-21 08:34 GMT
  • 3 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டதுடன், 50 லட்சம் ரூபாய் அபராதம்.
  • மேல்முறையீடு செய்வதற்காக 30 நாட்கள் தண்டனை நிறுத்தி வைப்பு.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், 50 லட்சம் ரூபாய் அபாரதம் விதித்து, அபராதம் கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல்முறையீடு செய்யும் வகையில் ஒரு மாதம் காலஅவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒருமாதம் கழித்து விழுப்புரம் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி. பதவிகளில் இருப்பவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றால் அவர்கள் பதவி இழக்க நேரிடும். மேலும் 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது. மேல்முறையீடு வழக்கில் தீர்ப்பு நிறுத்தி வைத்தால் மட்டுமே பதவி பறிப்பு திரும்ப பெறப்படும்.

இந்த நிலையில் தமிழகத்தில் அமைச்சராக இருந்து பதவி இழக்கும் 3-வது நபர் இவராவார். இதற்கு முன் அதிமுக முதலமைச்சராக இருந்த மறைந்த ஜெயலலிதா கர்நாடக நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு சிறைத்தண்டனை பெற்றார். இதனால் அவரது அமைச்சர் பதவியை இழந்தார்.

அதேபோல் பாலகிருஷ்ண ரெட்டி அதிமுக ஆட்சியின்போது அமைச்சராக இருந்தபோது சிறைத்தண்டனை பெற்று அமைச்சர் பதவியை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News