தமிழ்நாடு செய்திகள்
சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை
- பல்வேறு இடங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது.
- மழை பரவலாக பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.
சென்னை:
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் பல்வேறு இடங்களில் தற்போது மழை பெய்து வருகிறது.
சென்னை எழும்பூர், புரசைவாக்கம், சென்டிரல், அண்ணாநகர், ஆதம்பாக்கம், கோயம்பேடு உள்பட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
மழை பரவலாக பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.