தந்தையின் உடலை பார்த்து கதறி அழும் மகன்கள்....
- வீட்டில் இருந்து புறப்பட்ட வாகனம் மதியம் 1.30 மணிக்கு கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. கட்சி தலைமை அலுவலகம் வந்தடைந்தது.
- பொதுமக்களின் வெள்ளத்தில் ஊர்ந்து வந்த வாகனத்துடன் விஜயகாந்தின் மகன்களான விஜய பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் ஆகியோரும் நடந்து வந்தனர்.
சென்னை :
தே.மு.தி.க. நிறுவன தலைவரும் நடிகருமான விஜயகாந்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது.
காலை 10.30 மணிக்கு சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் இருந்து புறப்பட்ட வாகனம் மதியம் 1.30 மணிக்கு கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. கட்சி தலைமை அலுவலகம் வந்தடைந்தது.
பொதுமக்களின் வெள்ளத்தில் ஊர்ந்து வந்த வாகனத்துடன் விஜயகாந்தின் மகன்களான விஜய பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் ஆகியோரும் நடந்து வந்தனர்.
அப்போது பொதுமக்கள் பலரும் விஜயகாந்த் மகன்களிடம் பேசினார். அப்போது அவர்கள் கண் கலங்கினர்.
இதையடுத்து கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்ட தந்தை உடலை பார்த்ததும் விஜய பிரபாகரனும், சண்முக பாண்டியனும் கதறி அழுதனர். அவர்களுக்கு சுதீஷ் ஆறுதல் கூறினார்.
இதனிடையே விஜயகாந்தின் உடல் முன்னிலையில் மகனை கட்டி அணைத்தபடி பிரேமலதாவும் கதறி அழுதார்.