தமிழ்நாடு

புதிதாக தேர்வு செய்யப்பட்ட காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல்

Published On 2022-09-18 07:43 GMT   |   Update On 2022-09-18 07:43 GMT
  • மாநில தலைவரை நியமிக்கும் அதிகாரம் மற்றும் அகில இந்திய தலைமையை தேர்வு செய்யும் அதிகாரத்தை சோனியா காந்திக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
  • கூட்டத்துக்கு தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், அகில இந்திய செயலாளர் ஸ்ரீவல்ல பிரசாத் ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள்.

சென்னை:

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறுகிறது. இதில் வாக்களிக்க தகுதியான பொதுக்குழு உறுப்பினர்களை வைத்து ஒவ்வொரு மாநிலத்திலும் வருகிற 20-ந் தேதிக்குள் பொதுக்குழு கூட்டம் நடத்தி தீர்மானத்தை அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதையடுத்து தமிழக காங்கிரஸ் பொதுக்குழு கூட்டம் நாளை வேப்பேரியில் உள்ள ஓம்.எம்.இ.ஏ. மண்டபத்தில் காலை 11.30 மணிக்கு பொதுக்குழு கூட்டம் நடக்கிறது.

தமிழகத்தில் 680 பொதுக்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி ஒவ்வொரு பொதுக்குழு உறுப்பினருக்கும் செல்போனில் எஸ்.எம்.எஸ். அனுப்பப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்குகிறார்.

மாநில தலைவரை நியமிக்கும் அதிகாரம் மற்றும் அகில இந்திய தலைமையை தேர்வு செய்யும் அதிகாரத்தை சோனியா காந்திக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

இந்த கூட்டத்துக்கு தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், அகில இந்திய செயலாளர் ஸ்ரீவல்ல பிரசாத் ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள்.

Tags:    

Similar News