தமிழ்நாடு செய்திகள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் விளவங்கோடு காங்கிரஸ் எம்.எல்.ஏ. தாரகை கத்பர்ட் பதவியேற்பு

Published On 2024-06-12 11:03 IST   |   Update On 2024-06-12 11:13:00 IST
  • சபாநாயகர் அப்பாவு அறையில் பதவி பிரமாணம் செய்து வைக்கும் நிகழ்வுகள் நடைபெற்றன.
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சபாநாயகர் அப்பாவு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

சென்னை:

விளவங்கோடு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த விஜயதரணி காங்கிரஸ் கட்சியில் இருந்து பாரதிய ஜனதா கட்சிக்கு தாவியதால் தனது எம்.எல்.ஏ.பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

இதைத் தொடர்ந்து விளவங்கோடு தொகுதிக்கு பாராளுமன்ற தேர்தலுடன் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட தாரகை கத்பர்ட் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.ஆனார்.

இன்று அவர் எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்க சென்னை தலைமைச் செயலகம் வந்தார். அங்கு சபாநாயகர் அப்பாவு அறையில் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கும் நிகழ்வுகள் நடைபெற்றன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சபாநாயகர் அப்பாவு அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு, ராஜகண்ணப்பன், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, விஜய் வசந்த் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ராஜேஸ் தாஷ், ரூபி மனோகரன், பிரின்ஸ் ஆகியோர் பங்கேற்றனர்.


Tags:    

Similar News