தமிழ்நாடு

சென்னையில் 14-ந்தேதி தமிழக வாழ்வுரிமை கட்சி ஆலோசனை கூட்டம்

Update: 2023-06-10 09:00 GMT
  • பாராளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து வேல்முருகன் எம்.எல்.ஏ. கட்சி நிர்வாகிகளின் கருத்தை கேட்டறிகிறார்.
  • மாவட்டச் செயலாளர் அப்துல் சபீக் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொள்ள உள்ளனர்.

சென்னை:

தமிழக வாழ்வுரிமை கட்சியின் ஆலோசனை கூட்டம் வருகிற 14-ந்தேதி சென்னையில் நடைபெறுகிறது. கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் சத்ரியன் து.வெ.வேணுகோபால் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் கட்சியின் நிறுவனத் தலைவர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ. பங்கேற்று பேசுகிறார்.

கூட்டத்தில் கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்தும், கிளை கழகம் தோறும் கொடியேற்று விழா நடத்துவது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.

பாராளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற இருப்பதால் தமிழக வாழ்வுரிமை கட்சியின் கூட்டணி நிலைப்பாடு குறித்து தலைவர் வேல்முருகன் எம்.எல். ஏ. விரிவாக விவாதிக்கிறார்.

பாராளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்தும் வேல்முருகன் எம்.எல்.ஏ. கட்சி நிர்வாகிகளின் கருத்தை கேட்டறிகிறார். மாவட்டச் செயலாளர் அப்துல் சபீக் உள்ளிட்ட ஏராளமானோர் இதில் கலந்து கொள்ள உள்ளனர். அண்ணாநகர், வில்லிவாக்கம், பெரம்பூர், கொளத்தூர் பகுதி நிர்வாகிகள் இதில் பங்கேற்க உள்ளனர்.

இந்தக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை துணைப் பொதுச்செயலாளர் சத்ரியன் து.வெ.வேணுகோபால் முன்னின்று செய்து வருகிறார்.

Tags:    

Similar News