தமிழ்நாடு

சூலூரில் நாய் குறுக்கே சென்றதால் மரத்தில் மோதிய கார் தீப்பிடித்து எறிந்ததால் பரபரப்பு

Published On 2023-05-24 05:12 GMT   |   Update On 2023-05-24 05:12 GMT
  • நாய் மீது மோதாமல் இருக்க காரை டிரைவர் இடது புறமாக காரை வளைத்துள்ளனர்.
  • கார் நிலைத்தடுமாறி அருகே இருந்த புளிய மரத்தின் மீது மோதியது. இதில் கார் உடனே தீப்பற்றி எரிந்துள்ளது.

நீலாம்பூர்:

கோவை மாவட்டம் சூலூர் கண்ணம்பாளையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபம் எதிரில் சூலூர் நோக்கி கார் ஒன்று வந்து கொண்டிருந்தது.

அந்த காரை முத்து கவுண்டம்புதூரைச் சேர்ந்த ரமேஷ் மற்றும் அவரது ஓட்டுநர் காரை ஓட்டி வந்துள்ளனர்.

அப்போது மண்டபம் அருகே வரும் பொழுது நாய் குறுக்கே சென்றதாக கூறப்படுகிறது. இதனால் நாய் மீது மோதாமல் இருக்க காரை டிரைவர் இடது புறமாக காரை வளைத்துள்ளனர்.

கார் நிலைத்தடுமாறி அருகே இருந்த புளிய மரத்தின் மீது மோதியது. இதில் கார் உடனே தீப்பற்றி எரிந்துள்ளது.

உடனடியாக காரில் இருந்து இறங்கிய ரமேஷ் மற்றும் அவரது ஓட்டுநர் சூலூர் போலீஸ் நிலையத்துக்கு புகார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தீயை அணைப்பதற்கு முயற்சித்தும் முடியவில்லை. பின்னர் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.

இதில் அதிர்ஷ்டவசமாக கார் டிரைவரும், கார் உரிமையாளர் ரமேசும் உயிர் தப்பினர். இது தொடர்பாக சூலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாய் குறுக்கே சென்றதால் கார் புளியமரத்தின் மீது மோதிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News